August 18, 2026

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டுக்கான 2ஆம் தவணைப் பரீட்சையில் தத்தமது வகுப்புகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 17.08.2026 அன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம். நளீம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதி அதிபர் திருமதி றிஸ்லியா உவைஸ் தலைமையில் இடம்பெற்றது. 2026ஆம் ஆண்டின் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் 2ஆம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு இன்று செவ்வாய்கிழமை (18) கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு மகாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன் கலந்து சிறப்பித்தார். ஆய்வு மகாநாட்டின் ஆதாரசுருதி உரையினை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வழங்ஙியிருந்தார். இந்த

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது ஆய்வு மகாநாடு Read More »

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து  செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்

 (கனகராஜா சரவணன் ) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான்  மதுசலா கேதீஸ்வரன் இன்று  செவ்வாய்க்கிழமை (18) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ்

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து  செப்டம்பர் 1 வரை விளக்கமறியல் Read More »

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விழித்தெழுவோம் தலசீமியா நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்கிழமை(18.08.2026) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகளூடாக மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள் அலுவலகம் வரை சென்றடைந்தது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர்.ஆர்.முரளீஸ்வரன் தலைமையில்  இந்த விழிப்புணர்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி Read More »

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை!

கொழும்பு, வெள்ளவத்தை மிராஜ் ஹோட்டலில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே நேரத்தில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அதிகளவான தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது. லண்டனின் பிரபல தொழிலதிபரும் சமூகசேவையாளருமான

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்பிலான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வரலாற்றுச் சாதனை! Read More »

2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் – பிரபு எம்.பி.

2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள். ஏன தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் திங்கட்கிழமை(17.08.2026) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. போக்குவரத்து,

2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் – பிரபு எம்.பி. Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 432 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட இதயவியல் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவீன இதயவியல் சிகிச்சை விடுதி (Cardiology Ward) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதய நோய் சிகிச்சைகளுக்காக ஏனைய தொலைதூர வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பிரிவின் சிறப்பு வசதிகள்: இத்திறப்பு விழா நிகழ்வில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 432 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட இதயவியல் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு Read More »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அச்சம் அதனால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும் எனவும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் 7ஆவது வட்டார சபையாக வேலனை பிரதேசத்திற்கட்பட்ட, நயினாதீவு வட்டார சபை அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாற தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல விடயமாகும். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே மக்கள் எமக்கு ஆணையளித்தார்கள். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன. இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் ஆராயும் நீதிபதிகள் ஓய்வுபெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும் அச்சம் நிலவுகிறது. அதனால் தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள்.  இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை. தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். அதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள், உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போது தான் மீண்டும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளோம். எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது. தமிழகத்தில் நல்ல மீனவர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலர் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்துத் தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும், இரண்டாவது மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும் நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம். இங்கிருந்து சென்று போட்டிபோட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கின்றனர். ஆனால், எமது மீனவர்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமாம். மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும்; அதில் நாங்களே வெற்றியும் பெறுவோம்” என்றார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அச்சம் அதனால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள்  கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். சம்பவ பின்னணி: கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70

ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள்  கைது Read More »

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே கடமையை பொறுப்பேற்றார்–

(கனகராஜா சரவணன்)   கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே இன்று திங்கட்கிழமை (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில்  உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே கடமையை பொறுப்பேற்றார்– Read More »