August 18, 2026

கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ஹஸ்பர் ஏ ஹலீம் – 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் நாட்டுக்கு ஆற்றிய உரையின்

கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் Read More »

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் மீட்பு—

(கனகராஜா சரவணன்)   மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (17) காலையில் மீட்டகப்பட்டுள்ளதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை நாடுமாறு பாசிக்குடா பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர் இதனையடுத்து பொலிசார் குறித்த

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் மீட்பு— Read More »

சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’:

பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு! ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாகுவதற்கு அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பறியது என்றார். இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு- 2025 நிகழ்வு (2026.08.16) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்பிரதம

சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’: Read More »

மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பெற்றுக்கொண்டார்!

ரோட்டரி அமைப்பின் உன்னத திட்டங்களில் ஒன்றான “ப்ராஜெக்ட் தன்வந்தரி” (Project Dhanvantari @ Sri Lanka) – “வாசி சுவாசி” திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்களை வழங்கும் நிகழ்வு இந்தியாவின் தி நகர் Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரோட்டரி அமைப்பின் பட்டயத் தலைவருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் மட்டக்களப்பு பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்

மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பெற்றுக்கொண்டார்! Read More »

திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாள் பயிற்சி

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டத்தில் உத்தியோகத்தர்களுக்கான உளவளத்துணை மற்றும் சமூகப் பணி தொடர்பிலான பயிற்சிநெறி இன்று(17) இடம் பெற்றன.முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பயிற்சி இன்று (17) தொடக்கம் 19.08.2026 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளன. ஆரம்ப முதல் நாள் நிகழ்வினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாள் பயிற்சி Read More »