• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பெற்றுக்கொண்டார்!

மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்கள் கையளிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பெற்றுக்கொண்டார்!

ரோட்டரி அமைப்பின் உன்னத திட்டங்களில் ஒன்றான “ப்ராஜெக்ட் தன்வந்தரி” (Project Dhanvantari @ Sri Lanka) – “வாசி சுவாசி” திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்திற்கு 2,000 தமிழ் புத்தகங்களை வழங்கும் நிகழ்வு இந்தியாவின் தி நகர் Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரோட்டரி அமைப்பின் பட்டயத் தலைவருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் மட்டக்களப்பு பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்ட அவர், நூலகத்திற்கான 2,000 தமிழ் புத்தகங்களையும் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு பகுதி மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட புத்தகங்களில் நாவல்கள், கவிதைகள், வரலாற்று நூல்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் பல்துறை ஆய்வு நூல்கள் எனப் பல்வேறு தலைப்பிலான அரிய புத்தகங்கள் அடங்குகின்றன. இவை விரைவில் மட்டக்களப்பு மாநகர சபை நூலகத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

Share the Post: