மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் பொருளாதார நகர்வுகள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (15.07.2026) கணிசமான உயர்வைப்பதிவு செய்துள்ளன.
உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி நகர்வதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்றைய வர்த்தக ஆரம்பத்தில் சர்வதேச சந்தை நிலவரப்படி:
- ஒரு அவுண்ஸ் தங்கம்: 4,048.64 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
- ஒரு அவுண்ஸ் வெள்ளி: 58.65 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. எனினும், தற்போதைய சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் ஆகியவற்றின் நேரடித் தாக்கம் காரணமாக, இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன.
அரசியல் நகர்வுகள் மற்றும் டொலரின் மதிப்பு மாற்றம் என்பனவே இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




