“முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற தாரக மந்திரத்துடன் கடந்த ஆறு வருடங்களாக ஊடகத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் ‘ஆர்.ஜே.மீடியா’ (RJ Media) ஊடக வலையமைப்பின் 6ஆம் ஆண்டு பூர்த்தி விழாவும், சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் நேற்று (04.07.2026) சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக நடைபெற்றது.
ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் நடைபெற்ற இந்நாட்டளாவிய ரீதியிலான விழாவில், கலை, கல்வி, ஊடகம் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலந்துகொண்ட முக்கிய அதிதிகள்:
- பிரதம அதிதி: சிரேஷ்ட பேராசிரியர் எம்.எம்.பாஸில் (பீடாதிபதி – கலை மற்றும் கலாசார பீடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
- கௌரவ அதிதிகள்:
- அஷ்ஷெய்க் றிஸ்வி மஜீதி (சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்)
- வைத்தியர் பி.றிம்ஸான்
- ஸாலிஹீன் (சிரேஷ்ட வானிலை அதிகாரி)
- ஸமீஹா ஸபீர் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)
- றஸ்மி மூஸா (பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது)
- அஸ்மியாஸ் ஷஹீத் (சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்)
- றமீஸா கான் (விரிவுரையாளர்)
- இர்ஷாத் ஏ.காதர் (சிரேஷ்ட ஊடகவியலாளர்)
- விசேட அதிதிகள்:
- எம்.கவிதா பாரதி (செய்தி வாசிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சி)
- ஹென்ரி மிட்செல் (ஆய்வாளர்)
- ஏ.எம்.அஸ்கர் (நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சி)
- எஸ்.எச்.இஷ்ரத் ரிஜா (பணிப்பாளர், ஸிக்னேச்சர் குளோ நிறுவனம்)
விருதுகளும் கௌரவிப்புகளும்:
இந்நிகழ்வின் போது வருகை தந்த அதிதிகளுக்கு அவர்களின் சமூகப் பங்களிப்பைப் பாராட்டி விசேட கௌரவங்கள் வழங்கப்பட்டதோடு, பின்வரும் பிரிவுகளின் கீழ் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன:
- குரல் மகுடம் விருது: ஒரு வருட காலமாக நடைபெற்ற ‘அறிவிப்பாளர் குரல் மகுடம்’ போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எ.ஸி.ஹதீகா ஸனானிஸ் அவர்களுக்கு ‘குரல் மகுடம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய வெற்றியாளர்களும் பாராட்டப்பட்டனர்.
- பிசினஸ் எக்ஸலன்ஸ் விருது (Business Excellence Award): வணிகத் துறையில் சிறப்பான சாதனைகளைப் படைத்த சாதனையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
- கல்வி மற்றும் கலைக் கௌரவிப்புகள்: ஆர்.ஜே. மீடியாவின் ஊடகக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, தேசிய ரீதியில் நடத்தப்பட்ட மருதாணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
- உறுப்பினர்கள் கௌரவிப்பு: நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்த ஆர்.ஜே. மீடியா அமைப்பின் அங்கத்தவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
தலைநகரில் மிக விமரிசையாக நடைபெற்ற இந்த வர்ணமயமான விழாவில், நாடெங்கிலும் இருந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஊடக ஆர்வலர்கள் கலந்துகொண்டமை





