• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கேகாலையில் இ.போ.ச – தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து: 18 பேர் காயம்!

கேகாலையில் இ.போ.ச – தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து: 18 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை – கரடுபன பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6.15 மணியளவில் இக்கோர விபத்து சம்பவித்துள்ளது.

ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்த 18 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காகக் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: