ஹஜ் பெருநாள் தினமான இன்று (28) கிண்ணியா குறிஞ்சாக்கேணி VC மைதானத்திலும் ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
பெருமளவானவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் தொழுகை முடிந்தவுடன் அன்பு,பாசம்,கருணை போன்றவற்றை வெளிப்படுத்தும் முகமாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கைலாகு கொடுத்து முஸாபகா செய்து கொண்டனர்.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.



Views: 151




