வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கினை முன்னிட்டு, இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு இன்று பக்திப் பெருக்குடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்திற்கு வருகை தந்திருந்த திரளான பக்தர்கள், அம்மனின் திருவருளை வேண்டி பக்தி பூர்வமாக இக்கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பக்தி உணர்வையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்திய அனைத்து பக்தர்களுக்கும் இந்து கலா மன்றத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
கண்ணகை அம்மனின் அருளாசி உலகெங்கும் வாழும் மக்களின் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது பிரார்த்திக்கப்பட்டது.





Views: 222




