• Home
  • உள்ளூர் செய்திகள்
  • ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு!

ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொம்மாதுறை பாரதியார் வீதியை செப்பனிடும் பணியின் ஆரம்ப அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07.08.2026) சிறப்பாக இடம்பெற்றது.

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் கொம்மாதுறை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் கா.நாகேந்திரன் அவர்களின் முன்மொழிவுக்கு அமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வு:

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, இறைவழிபாடு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மக்கள் குறைகேள் கலந்துரையாடல்:

அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் அன்றாடக் தேவைகள் மற்றும் கிராமத்தின் பிரதான அபிவிருத்திப் பிரச்சினைகள் குறித்து அதிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்களான கா.நாகேந்திரன், த.பிரபாகரன், நிதர்சன், பிரதேச சபைச் செயலாளர், கொம்மாதுறை கிழக்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், சனசமூக அபிவிருத்தி நிலையப் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Share the Post: