• Home
  • உள்ளூர் செய்திகள்
  • “பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“தேசிய கண்காட்சியில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்.

“பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“தேசிய கண்காட்சியில் பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடு -அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக “பனை வாழ்வின் விருட்சம் – நாட்டின் சுபீட்சம்“ எனும் தொனிப்பொருளில் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள தேசிய கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (08.08.2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கண்காட்சியில் பல்வேறு பனைசார் உற்பத்திபொருள்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனைகளும் இடம்பெறுவதுடன் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சி செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share the Post: