அரச தகவல் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “டிஜிட்டல், ஏ.ஐ. (AI) மற்றும் செய்தித் திறன்” பற்றிய 4 நாட்கள் கொண்ட குறுகிய கால ஊடகப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
தேசியப் பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் ஆகிய முப்படைகளின் ஊடகப் பிரிவு அதிகாரிகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இப் பயிற்சிப் பட்டறையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ‘செயற்கை நுண்ணறிவு’ (AI), ChatGPT போன்ற நவீன தொழில்நுட்ப வல்லுநர்கள், தினமின, லங்காதீப, த மோனிங், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளின் தலைமை ஆசிரியர்கள், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.
பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பங்கேற்பாளர்களுக்கு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கூட்ட மண்டபத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.







