• Home
  • ›
  • அரசியல்
  • ›
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே இன்று (12) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்த வேளையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் வைத்தியசாலை அனுமதி குறித்தான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைதுரூபா 7 இலட்சம் பெறுமதியான உருக்கப்பட்ட தங்க நகைகளுடன் கல்முனைக் கடை ஊழியர்களும் சிக்கினர்