• Home
  • உள்ளூர் செய்திகள்
  • உவர்மலை விடுதியில் விபச்சார நடவடிக்கை: மேலாளர் உட்பட நால்வர் விளக்கமறியலில்!

உவர்மலை விடுதியில் விபச்சார நடவடிக்கை: மேலாளர் உட்பட நால்வர் விளக்கமறியலில்!

திருகோணமலை – உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோத விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த சம்பவம் தொடர்பில் விடுதிப் பொறுப்பாளர் உட்பட நால்வரை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இரு நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த விடுதி திடீரென சுற்றிவளைக்கப்பட்டது. இதன் போது அங்கு விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 48, 38 மற்றும் 43 வயதுடைய மூன்று பெண்களும், 54 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: