• Home
  • உள்ளூர் செய்திகள்
  • அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வேண்டி அம்பாரை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் கோரிக்கை

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வேண்டி அம்பாரை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் கோரிக்கை

வி.சுகிர்தகுமார்     

  அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வேண்டி அம்பாரை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளது.


அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் முன்பாக இன்று (23) ஒன்றிணைந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனோஜனின் விடுதலை வேண்டி ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.


இவ்விடயம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் நன்றி தெரிவிப்பதுடன் அனைத்து மத தலைவர்களும் அனைத்து இனமக்களும் ஒன்றாய் குரல் கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறிப்பாக பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புக்களும் தலைவர்களும் பொதுமக்களும் அனோஜனை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.


இதேநேரம் சவூதி மன்னரும் அரசாங்கமும் அனோஜன் செய்த தவறை மன்னித்து தண்டனையில் இருந்து விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

Share the Post: