(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (09); கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை 10.00 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.
இதன்போது அரசு மக்களுக்காக மக்கள் அரசுக்காக அல்ல, இனியும் வேண்டாம் அரச பயங்கரவாதம், நாங்கள் கேட்பது மாற்றம் ஆனால் கிடைத்தது ஏமாற்றம் , வேண்டாம் வேண்டாம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம். போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.





