விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக கண் மருத்துவப் பரிசோதனைகளுக்காக இன்று (09) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கண் உபாதை காரணமாக நேற்று (08) அவர் சிறைச்சாலை நிபுணர் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார். இதன்போது குறித்த மருத்துவரினால் வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, மேலதிக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணரிடம் அவரை ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
Post Views: 14




