அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்
பாறுக் ஷிஹான் சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றக் கைகொடுக்குமாறு பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவாஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான மனிதாபிமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் ஆற்றியுள்ள விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது பிராந்தியத்தைச் சேர்ந்த அனோஜன் எனும் இளைஞன், வறுமை மற்றும் குடும்பச் சுமை










