A.H.HASFAR HASFAR
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் கிண்ணியா பிரதான வீதியின் சூரங்ஙல் பகுதியில் (08) சிறிய ரக பட்டா மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

தம்பலகாமம் பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கிண்ணியா பகுதியில் இருந்து வருகை தந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த வீதி வாகன நெரிசலாக போக்குவரத்து மந்த கதியில் இடம் பெறுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post Views: 6




