சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவித்ததுடன், குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் நெருக்கமாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்

Post Views: 6




