மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த உபகரணங்கள் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் சர்வானந்தன், கௌரவ உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வட்டார உறுப்பினர் கௌரவ சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Post Views: 3




