• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிண்ணியாவில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

விசேட தேவையுடைய கிண்ணியா மாணவர்களின் பெற்றோர்களை வழிநடத்தும் நோக்கிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (29.06.2026) கிண்ணியா விஷன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

*கலைக் கல்வி சமூக சேவைகள் நிதியத்தின் (Association of Arts Education Social Service) ஏற்பாட்டில், அதன் தலைவர் பாஸித் முகைதீன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

*இதன்போது, விசேட தேவையுடைய மாணவர்களின் விசேட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் 📚

*அவர்களின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் 🍎

ஆகியன குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவூட்டும் விழிப்புணர்வு விரிவுரைகள் நவீன விளக்கக் காட்சிகளுடன் (Screen Presentation) வழங்கப்பட்டன.

*கலந்துகொண்ட முக்கிய அதிதிகள்:

Child Emergency Relief International அமைப்பின் Case மேலாளர் R. சங்கர், கிண்ணியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் M. S. M. தௌஸீத் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், டாக்டர் எச். எம்.சமீம், ஓய்வுநிலை நீதிமன்றப் பதிவாளர் எஸ். எம். நியாஸ், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, உளநல வைத்தியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எனப் பல்துறை சார்ந்த நிபுணர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினர்.

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Share the Post: