ஹஸ்பர் ஏ.எச்
தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் CaFFE அமைப்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை சந்திக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக, 18.09.2026 அன்று பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் திரு. நிஹால் அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கீன், நிர்வாகப் பணிப்பாளர் திருமதி. சுரங்கி ஆரியவன்ச மற்றும் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திருமதி. மதுமாதவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தேர்தல் பிரச்சார நிதிச் சட்டங்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் அரசியல் பங்கேற்பு, முன்கூட்டிய வாக்களிப்பு / விசேட வாக்களிப்பு / வெளிநாடுகளில் வசிப்போருக்கான வாக்களிப்பு, தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் செயல்திறன், அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பல முக்கியமானதும் பெறுமதியானதுமான விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான கலந்துரையாடலாக இது அமைந்தது.




