இலங்கையில் டெங்கு தொற்றின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 63,839 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று (07) வரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதே இந்த சடுதியான பரவலுக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அவசரமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
Views: 98




