July 8, 2026

நீர் கட்டண நிலுவை உள்ளதா? எச்சரிக்கை! நாடு தழுவிய ரீதியில் 13ஆம் திகதி முதல் ‘நீர் துண்டிப்பு வாரம்’!

நீண்டகாலமாகச் செலுத்தப்படாமல் உள்ள நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. ‘நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விசேட அதிரடி நடவடிக்கை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. தீவிரமாகக் கண்காணிக்கப்படும் பகுதிகள்: இந்த விசேட வேலைத்திட்டம் முதற்கட்டமாக மேல் மாகாணத்தின் முக்கிய பகுதிகளில் தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது:

நீர் கட்டண நிலுவை உள்ளதா? எச்சரிக்கை! நாடு தழுவிய ரீதியில் 13ஆம் திகதி முதல் ‘நீர் துண்டிப்பு வாரம்’! Read More »

வத்தளையில் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது!

வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிலோகிராம் 325 கிராம் (2.325 kg) ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்

வத்தளையில் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது! Read More »

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

​மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து உயர்கல்வி, தொழில் மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக சம்மாந்துறை பகுதிக்கு வருகை தருபவர்கள் மூலம் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். ​இந்த விடயம் குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள சுகாதாரப் அதிகாரிகள், குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து வருபவர்கள் தங்களின் வருகையைத் தொடர்ந்து குறைந்தது 14 நாட்களுக்கு பகல் வேளைகளில் நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை Read More »

கரம்பை முதல் உடப்பு வரையிலான சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பம்!

பொதுமக்களின் நீண்ட நாள் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், கரம்பை முதல் உடப்பு வரையிலான வீதி புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. முன்னெடுப்பு: தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான சகோதரர் M.J.M. பைசல் Mohamed Faizal அவர்கள் முன்னின்று, கடந்த 03.07.2026 வெள்ளிக்கிழமை அன்று இப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். நோக்கம்: இந்த சாலை புனரமைப்பின் ஊடாக, அப்பகுதி மக்களுக்கு

கரம்பை முதல் உடப்பு வரையிலான சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பம்! Read More »

மட்டக்களப்பில் பிரஜா சக்தி வேலைத்திட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நெல் உலர்த்தும் இயந்திரம் தொடர்பான கலந்துரையால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் ஏற்பாட்டில் இன்று (06) பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. கடந்த காலங்களில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மழை வெள்ளங்களினால் நெல்லினை உலர்த்த முடியாது பாரிய பிரச்சினையை எதிர் நோக்கியிருந்தனர். இதனை அவதானித்த

மட்டக்களப்பில் பிரஜா சக்தி வேலைத்திட்ட கலந்துரையாடல் Read More »

நுவரெலியா பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பின்புற பகுதியில் இன்று (08) தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டதன் பின்னர், வாகனத்தை நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கி (Reverse) செலுத்திய போதே கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில் பஸ்ஸினுள் பயணிகள் எவரும் இல்லாதிருந்தமையால், பாரிய உயிர்ச்சேதங்கள் மற்றும் காயங்கள் எதுவும் இன்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நுவரெலியா பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பின்புற பகுதியில் இன்று (08) தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read More »

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தை மையமாகக் கொண்டு காரைதீவு பிரதேச சபையின் சிரமதானப் பணி

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆலய வளாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் தவிசாளரும் தற்போதைய கௌரவ உறுப்பினருமான வை. கோபிகாந்த், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இணைந்து சிரமதானப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். சிரமதானத்தின் போது

உகந்தமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தை மையமாகக் கொண்டு காரைதீவு பிரதேச சபையின் சிரமதானப் பணி Read More »

தேசிய மக்கள் சக்தியின் வீடமைப்புத் திட்டம்: இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 50 இலட்சம் செலவில் புதிய இல்லம்!

இயற்கை அனர்த்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஏற்பாட்டில் புதிய வீடு ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தேதாப்பிள கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் சமூக நலன்புரித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 50 இலட்சம் மதிப்பிடப்பட்ட செலவில் இந்த நவீன வீடு அமையவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வீடமைப்புத் திட்டம்: இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 50 இலட்சம் செலவில் புதிய இல்லம்! Read More »

நண்பர்கள், உறவினர்களின் கண்ணீர் அஞ்சலியுடன்… உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வெலிகடையில் இறுதி மரியாதை!

கடமையின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வெலிகடையில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

நண்பர்கள், உறவினர்களின் கண்ணீர் அஞ்சலியுடன்… உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வெலிகடையில் இறுதி மரியாதை! Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மீள் திருத்தக் கட்டணங்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜூலை 08) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு: மேலதிக விபரங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு! Read More »