வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிலோகிராம் 325 கிராம் (2.325 kg) ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Views: 137




