vadivel shagthivel
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காரைதீவிலிருந்து கல்லடி வரையிலான தெய்வீக ரத ஊர்வலம் இன்று சனிக்கிழமையும்(03.10.2026) ஆரம்பமாகி இன்றயதினம் மாலை களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.
களுவாஞ்சிகுடியில் வைத்து களுவாஞ்சிகுடி சைவ மகாசபையினர் ரத ஊர்வலலத்தை வரவேற்றனர். பின்னர் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தெடர்ந்து இராமகிருஷ்ணருக்குப் பூஜைகள் நடைபெற்றன.

இந்த புனித ரத ஊர்வலத்தில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
இதன்போது மக்கள் வீதியோரங்களில் நிறைகுடம் வைத்து தெய்வீக ரத ஊர்வலத்தை வழிபாடு செய்கின்றனர். இன்றயதினம் இந்த ஊர்வலம் குருக்கள்மடம் கிராமம் வரைச் சென்று நாளை ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து புறப்பட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷனைச் சென்றடையவுள்ளது.
இந்தப் புனித ரத ஊர்வலத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியர் மற்றும் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோரது உருவங்களைத் தாங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.







