• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா: மருத்துவ பீடத்தின் வரலாற்றுச் சாதனை!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா: மருத்துவ பீடத்தின் வரலாற்றுச் சாதனை!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

இவ்விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த புதிய மருத்துவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மருத்துவ பீடம் நிறுவப்பட்டதற்குப் பின்னரான வரலாற்றில், பட்டமளிப்பு விழாவொன்றில் முதன்முறையாக மருத்துவப் பட்டதாரிகள் பட்டம் பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமைகின்றது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில், துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம் மற்றும் மேலாண்மை ஆகிய பீடங்களின் பட்டதாரிகளுடன் இணைந்து, மருத்துவப் பட்டதாரிகளும் பட்டம் பெறுவது கிழக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் பெரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாகப் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share the Post: