• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது.

கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பொலிசார் கடற்படையினர் பிரஜா சக்தி அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற சிரமதானப்பணியில் நீண்ட வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் சிரமதானப்பணியின் நோக்கம் தொடர்பான ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதுடன் பிரதேச செயலாளர் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் தெளிவூட்டினார்.
தொடர்ந்து வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைகள் அகற்றப்பட்டது.
இதேநேரம் பிரதேச சபையின் உழவு இயந்திரங்கள் ஊடாக குப்பைகள் மற்றும் வடிகான்களில் தேங்கி கிடந்த மண் அகற்றப்பட்டது.

Share the Post: