• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • டெங்கு ஒழிப்பு: பொதுமக்களின் முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

டெங்கு ஒழிப்பு: பொதுமக்களின் முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மேல் மாகாணத்தில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் மற்றும் அதற்கு சாதகமான சூழல்கள் குறித்து பொதுமக்கள் பின்வரும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • விசேட தொலைபேசி இலக்கம்: 0117 966 366

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காணப்படும் டெங்கு அபாயங்கள் குறித்த தகவல்களை இந்த இலக்கத்தின் ஊடாக பகிர்ந்து, இந்நோயைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வுப் பணியில் பங்காளராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share the Post: