• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செங்கலடியில் புதிய ஆயுர்வேத நிறுவனம் ஆரம்பம்!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செங்கலடியில் புதிய ஆயுர்வேத நிறுவனம் ஆரம்பம்!

மட்டக்களப்பு, செங்கலடிப் பகுதியில் உள்நாட்டுப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும், இயற்கை உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் நோகில் அமைக்கப்பட்ட புதிய “ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்தி நிறுவனம்” (Ayurveda Healthy Production) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாத்து, மக்களுக்கு எவ்வித இரசாயனக் கலவையுமற்ற ஆரோக்கியமான ஆயுர்வேத தயாரிப்புக்களை வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் முக்கிய பிரமுகர்கள், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரது முன்னிலையில் இதன் ஆரம்ப விழா செங்கலடியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த புதிய உற்பத்தி நிறுவனத்தின் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரமும் மேலும் பலமடையும் என இதன் அமைப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் தரம்மிக்க பாரம்பரிய ஆயுர்வேத மற்றும் இயற்கை ஆரோக்கிய தயாரிப்புக்கள் இனிவரும் காலங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.