• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் உத்தியோகபூர்வமாக கடமையேற்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் உத்தியோகபூர்வமாக கடமையேற்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் இன்று முதலாம் திகதி ஜூலை மாதம் இரண்டாயிரத்து இருபத்தாறாம் ஆண்டு உத்தியோகபூர்வமாகத் தனது பதவியினைப் பொறுப்பேற்றுள்ளார். மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பிரிவில் நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ பொறுப்பேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் மொஹமட் பஸீர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சமுர்த்தி அபிவிருத்தித் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது பணிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த எஸ் ராஜ்பாபு அவர்கள் இடமாற்றம் பெற்று கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக இன்று பதவியேற்கும் நிலையில், கடந்த தசாப்தத்தில் நான்கு வருடங்களாக வாழைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிவந்த திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராகக் கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: