திருகோணமலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை அமரர் இராஜராஜேஸ்வரி அவர்களின் நூறாவது ஜனத்தை முன்னிட்டும், 34 வது நினைவு தினத்தை முன்னிட்டும் வறியவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (01) திருகோணமலையில் இடம் பெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! Read More »










