மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து: பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசம்!
மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (01) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. குறித்த உணவகத்தில் திடீரென தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்களும் ஊழியர்களும் உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முதற்கட்ட









