• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பெண்களுக்கான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி (29.06.2026 ) அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த பெண்களுக்கான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி (29.06.2026 ) அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

​இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

​சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்புரை மற்றும் தலைமையுரை ஆகியன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த அதிதிகளின் சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.

​விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதியில், திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்கள் மற்றும் காசோலைகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

​இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு.மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்களான திரு.சி.வவானந்தன், திரு.செ.வசிகரன், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், ஆலய நிர்வாகிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share the Post: