அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கான பத்து நாள் பயிற்சி நெறி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் அரச சேவை தொடர்பான அறிவு, திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
பயிற்சி நெறி கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி நிறைவடைந்ததுடன், பயிற்சியில் பங்குபற்றிய புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய, புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






