–
சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வு (Community-Based Rehabilitation – CBR) திட்டத்தின் கீழ், சமூக சேவைகள் திணைக்களத்தினால் (பத்தரமுல்ல ) ஒதுக்கப்பட்ட நிதி மூலம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுடைய ஒருவருக்கு ரூ. 170,000 பெறுமதியான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயனாளிக்கு, சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல், தொழில் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இத்தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு.கே.சதிசேகரன் தலைமையில் (29.09.2026) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட சமூக சேவைகள் ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன் மற்றும் தம்பலகாமம் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




