• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வடக்கில் இந்திய இழுவை படகினால் மீன்வளம் அழிந்ததே அவ்வாறே கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலையால் மீன் வளம் அழிக்கப்படுகின்றது– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின்  அந்தனிசில் ராஜ்குமார் காட்டம்-

வடக்கில் இந்திய இழுவை படகினால் மீன்வளம் அழிந்ததே அவ்வாறே கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலையால் மீன் வளம் அழிக்கப்படுகின்றது– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின்  அந்தனிசில் ராஜ்குமார் காட்டம்-

(கனகராஜா சரவணன்)

வடக்கு கடலில் எவ்வாறு இந்திய இழுவை படகினால் கடல் மீன் வளங்கள் அழிக்கப்பட்டதே அதேபோல கிழக்கில் தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் திணைக்கள சில அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவித்து நாளுக்கு நாள் மீன்வளம் அழிக்கப்பட்டு வருகிறது இதனால் மீனவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடி இடம்பெற்று வருகின்றது இது மட்டக்களப்பு தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் இடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதையடுத்து கடந்த மாதம் சட்டவிரோத சுருக்கு வலை தடை செய்ய கோரி  திணைக்களத்துக்கு முன்னாள் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணிப்பாளருக்கு மகஜர் ஒன்றை வழங்கினோம் எதுவும் நடக்கவில்லை இந்த நிலையில் சிறிய அதிகாரம் கொண்ட எங்கள் அமைப்பு கடற்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 14 சுருக்கு வலைகளை பிடித்து கொடுத்தோம்.;

இருந்தபோதும்; கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் தொலைபேசி ஊடாக எங்கள் அமைப்பு தொடர்பு கொண்டு செட்டிபாளையத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோத சுருக்குவலை மறைத்து வைத்திருப்பதாக மீனவர்கள் எங்களுக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அதை பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்கள இரு உத்தியோகத்தர்களை தருமாறு கோரினோம்.

அதற்கு பணிப்பாளர் சனி,ஞாயிறு, உத்தியோகத்தர்களை தர முடியாது பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையை  கூட்டிச் சென்று பிடிக்குமாறு பதிலளித்தது டன் எங்கு இருக்கிறது என வினாவினார். அதை நாங்கள் கூறவில்லை ஆனால் அவர் சட்டவிரோத சுருக்கு இருக்கும் இடத்தை கேட்டறிந்து அவர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவே தான் அவர் இடத்தை கேட்டுள்ளார்.
இவ்வாறு கடற்றொழில் திணைக்களம் செய்ய வேண்டியதை பொலிசார் செய்ய வேண்டுமா? கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டியது கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினர் இந்த இரு பகுதியினர் தான் கடலில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.  

ஆனால் இந்த திணைக்கள உதவி பணிப்பாளருக்கு மற்றும் கடற்றொழில் பரிசோதகருக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை அவர்களுக்கு மீனவர்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டாலும் பரவாயில்லை அவர்களுக்கான சம்பளத்தை விட மேலதிகமாக சட்டவிரோதமான சுருக்கு உரிமையாளர் கொடுக்கும் வேதனம் மிக முக்கியமாக இருக்கும் காரணத்தினால் இந்த சட்டவிரோதமான சுருக்கை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை

இன்று கடலிலே சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடித்து அதை ரிக் டொக் மூலம் காணொளி செய்து வெளியிடுகின்றனர் எனவே அவர்களுக்கு உள்ள தைரியத்தை இவர்கள் கடற்படையே கடற்றொழில் திணைக்களம் கைது செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது ஏன் என்றால்  தாங்கள் மாதம் மாதம் எவ்வளவு பணத்தை இலஞ்சமாக கொடுப்பதாக அவர்களுக்கு தெரியும் என்பதால்.

மாங்காட்டை சேர்ந்த சுரேஷ்,குமார், றமணன், கிசு;குட்டி, ராஜேந்திரன், நிலுக்ஷன், ன்பவர்களே இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடித்து அதனை ரிரொக்கில் பதிவிட்டுள்ளனர் எனவே இவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் மீன்பிடி அமைச்சர்; இதில் கூடிய கவனம் செலுத்தி இந்த சட்டவிரோதமான சுருக்கு வலைகளை தடை செய்து வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேவேளை பூநொச்சிமுனை தொடக்கம் களுவாஞ்சிக்குடி வரை சட்டவிரோத சுருக்குவலை பாவித்து வரும் பூநொச்சிமுனை யைச் சேர்ந்த அசீஸ், கோழி லாபீர் என அழைக்கப்படும் லாபீர், ஆதம்பாவா, பவுசர் அலி, ஆதம்பாவா நபீர், மற்றும் பாலமுனை பகுதியைச் சேர்ந்த றபீக், செய்யுனு ஆபிதீன், உவைஸ், சிபான், கபீர், நசீர். பௌசர், நிக்கான், அஸ்ரப், மற்றும் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜீவன், கண்ணன், ரஞ்சி, வசந்தா, அனுஷன். மதி என்பவர்களின் மாங்காட்டை சேர்ந்த வெள்ளைக்கண்ணன்,

ரஞ்சன், மேனு, கேனு.. என்பவர்களுடன் தேற்றாத்தீவைச் சேர்ந்த சின்னத்தம்பி, கோபி ஆகியோர் சுருக்குவலை உரிமையாளர்கள் இவர்களுடன் சுருக்கு வலை இல்லாதவர்களுக்கு சுருக்கு வலைகளை கொடுத்து அவர்களிடம் மீனை வாங்கும் குபேரன், மற்றும் கிரான் குளத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் கிண்ணியா, கருக்குப்பனை பிரதேசங்களில் இருந்து சட்டவிரோத மீன்பிடி யாளர்களை கொண்டுவந்து அவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து கொடுத்து இந்த சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இவர்கள் தொடர்பாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் விசாரணை செய்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  

Share the Post: