November 10, 2026

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்: நவம்பர் 15 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டலத் தளம்பல், குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக மாறி, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கம் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இலங்கையை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார். இதன் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்: நவம்பர் 15 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! Read More »

பிள்ளையான் உள்ளிட்ட 3 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் குறிப்பிட்ட திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

பிள்ளையான் உள்ளிட்ட 3 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! Read More »

மாகாண பதில் பணிப்பாளர் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பதில் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சத்யசீலன் அவர்களுக்கான  நியமனத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (09) வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, இந்த நியமனம் 2026 நவம்பர் 09 முதல் மூன்று மாத காலத்திற்கு அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை (இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை)

மாகாண பதில் பணிப்பாளர் நியமனம் Read More »

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது-பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித் தொடரின் கிழக்கு மாகாண நிகழ்வு நேற்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு   பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது-பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா Read More »

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிகள்: மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி மாகாணச் சம்பியன் பட்டம் சூடி சாதனை!

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில், மட்டக்களப்பு புனித செசிலியா மகளிர் கல்லூரி அணி ஒட்டுமொத்த மாகாணச் சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. கடந்த நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இத்தொடரில், கிழக்கு மாகாணத்தின் பல முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த திறமையான அணிகள் கலந்துகொண்டு பலப்பரீட்சை நடத்தின. கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் களமிறங்கிய

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிகள்: மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி மாகாணச் சம்பியன் பட்டம் சூடி சாதனை! Read More »

இலங்கை – பூட்டான் கால்பந்து போட்டி 2-2 என சமன்! கோல்கீப்பர் விட்ட தவறும், மைதானத்தில் வெடித்த VAR சர்ச்சையும்!

தெற்காசிய கால்பந்து Federations (SAFF) சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், இலங்கை மற்றும் பூட்டான் அணிகள் மோதின. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி இறுதியில் 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு கோல்கீப்பரின் எதிர்பாராத சிறிய தவறு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்தத் தவறால் எதிரணி எளிதில் கோல் அடிக்க வழிவகுத்தமை

இலங்கை – பூட்டான் கால்பந்து போட்டி 2-2 என சமன்! கோல்கீப்பர் விட்ட தவறும், மைதானத்தில் வெடித்த VAR சர்ச்சையும்! Read More »

வடக்கில் இந்திய இழுவை படகினால் மீன்வளம் அழிந்ததே அவ்வாறே கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலையால் மீன் வளம் அழிக்கப்படுகின்றது– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின்  அந்தனிசில் ராஜ்குமார் காட்டம்-

(கனகராஜா சரவணன்) வடக்கு கடலில் எவ்வாறு இந்திய இழுவை படகினால் கடல் மீன் வளங்கள் அழிக்கப்பட்டதே அதேபோல கிழக்கில் தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் திணைக்கள சில அதிகாரிகளின் அனுசரனையுடன் சுருக்கு வலை பாவித்து நாளுக்கு நாள் மீன்வளம் அழிக்கப்பட்டு வருகிறது இதனால் மீனவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு

வடக்கில் இந்திய இழுவை படகினால் மீன்வளம் அழிந்ததே அவ்வாறே கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலையால் மீன் வளம் அழிக்கப்படுகின்றது– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின்  அந்தனிசில் ராஜ்குமார் காட்டம்- Read More »

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியில் பயங்கர வீதி விபத்து: 3 பேருந்துகள் மோதிப் பல பலத்த காயம்!

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் (10.11.2026) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு தொடர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்தது எப்படி? வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதனைத் தொடர்ந்து, அதே பாதையில் பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியில் பயங்கர வீதி விபத்து: 3 பேருந்துகள் மோதிப் பல பலத்த காயம்! Read More »

இன்று (10/11/2026) காலை சாவகச்சேரியில்…!

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (10/11/2026) சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. இதன்போது, அன்னாரின் மனைவி சசிகலா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அருந்தவபாலன், தமிழரசுகட்சி தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன்சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.

இன்று (10/11/2026) காலை சாவகச்சேரியில்…! Read More »

ஹட்டனில் இயற்கை சீற்றம்: வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட லொறி! 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கி மக்கள் அவதி!

மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஹட்டன் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (09) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராட்சத லொறி ஒன்று வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், இன்று (10) செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் வெள்ளநீர் சற்றே வடியத் தொடங்கிய நிலையில், அடித்துச் செல்லப்பட்ட லொறி மிக மோசமான நிலையில் வீழ்ந்து கிடப்பது தெரியவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகள்

ஹட்டனில் இயற்கை சீற்றம்: வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட லொறி! 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கி மக்கள் அவதி! Read More »