November 10, 2026

தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் !

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இவ் விருது வழங்கும் நிகழ்வு 08.11.2026 பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இவ்

தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் ! Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயம் தேசிய மட்டத்தில் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்து பெருமை சேர்த்துள்ளது.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டியில், தேசிய அளவில் மூன்றாம் இடத்தினை கல்குடா கல்வி வலயம் சுவீகரித்துள்ளது. இதன் மூலமாக இப்பகுதி தனது கல்வி மற்றும் நிர்வாகத் திறனை மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் குறிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில், கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்கள் வெற்றிக் கிண்ணத்தையும் சான்றிதழையும் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொண்டார். கல்வித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயம் தேசிய மட்டத்தில் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்து பெருமை சேர்த்துள்ளது. Read More »

கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாறுக் ஷிஹான்பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2026.01.16 அன்று கதிரியக்கவியலாளர் பதவிநிலைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்த நிலையில், இவர்களைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக அண்மையில் (30.10.2026) வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் பௌதிகவியல் பாடத்தில் ‘திறமைச் சித்தி’ (Credit/Distinction) கோரப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் சாதாரண சித்தியுடன் (Ordinary

கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு Read More »