• Home
  • உள்ளூர் செய்திகள்
  • காத்தான்குடியில் Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுகம்!

காத்தான்குடியில் Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுகம்!

காத்தான்குடி: Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை (Natural) ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுக நிகழ்வு அண்மையில் காத்தான்குடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் அல்-ஹாபிள் A.K. சுஹைல் அகமத் (மஜீதி) அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

முற்றிலும் இயற்கை மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் Mirage & Motion நிறுவனத்தின் தயாரிப்புகள், மக்களுக்குப் பாதுகாப்பான அழகு பராமரிப்பையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வழங்கும் உயரிய நோக்கத்துடன் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள், தொழில்துறை பிரதிநிதிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share the Post: