சாய்ந்தமருது பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து நடத்திய அதிரடிச் சுற்றிவளைப்பில், பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பாரிய கடத்தல் கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (04.07.2026) அதிகாலை இந்த விறுவிறுப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட தூரமாகப் போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பின்தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, கடத்தல்காரர்களின் கார் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அதிரடிப்படையினர் காரைச் சுற்றிவளைத்து, கடத்தல்காரர்களைத் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பல கோடி ரூபா பெறுமதியான பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




