• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிகள்: மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி மாகாணச் சம்பியன் பட்டம் சூடி சாதனை!

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிகள்: மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி மாகாணச் சம்பியன் பட்டம் சூடி சாதனை!

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில், மட்டக்களப்பு புனித செசிலியா மகளிர் கல்லூரி அணி ஒட்டுமொத்த மாகாணச் சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

கடந்த நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இத்தொடரில், கிழக்கு மாகாணத்தின் பல முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த திறமையான அணிகள் கலந்துகொண்டு பலப்பரீட்சை நடத்தின.

கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் களமிறங்கிய புனித செசிலியா கல்லூரியின் இளம் வீராங்கனைகள் தங்களது கூர்மையான சிந்தனை, வியூகங்கள் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தி முதலிடத்தைக் கைப்பற்றினர்.

சம்பியன் பட்டம் வென்ற திறமைமிக்க வீராங்கனைகள்:

  • M. Maanyu Kashni (அணித் தலைவி)
  • S. Risharthani
  • N. Marlini
  • C. N. Attarah Nimasha
  • D. Tharushi
  • S. Akshara
  • S. Joorvika

மிக இளம் வயதிலேயே இத்தகையதொரு பெருமைமிக்க சாதனையைப் படைத்து, பாடசாலைக்கும் முழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் வீராங்கனைகளுக்கு பாடசாலைச் சமூகம், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Share the Post: