• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியில் பயங்கர வீதி விபத்து: 3 பேருந்துகள் மோதிப் பல பலத்த காயம்!

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியில் பயங்கர வீதி விபத்து: 3 பேருந்துகள் மோதிப் பல பலத்த காயம்!

யாழ்ப்பாணம் – அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் (10.11.2026) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு தொடர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி? வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதனைத் தொடர்ந்து, அதே பாதையில் பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பேருந்துகளில் ஒன்றின் மீது பலமாக மோதியுள்ளது.

மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள்: இந்தத் தொடர் விபத்தில் பேருந்துகளில் பயணித்த பல பயணிகள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அனுராதபுரம், ரம்பேவ மற்றும் மதவாச்சி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: