• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா

மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா

ஹஸ்பர் ஏ எச் 

மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘தமிழ் – சிங்கள அகராதி’ (Tamil – Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா (03 அக்டோபர் 2026) திருகோணமலை உப்புவெளி பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.  

ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு தம்பிராசா ராஜசிங்கம் (Thampiraja Rajasingam) அவர்களின் எழுத்துருவாக்கத்தில் வெளிவந்த இந் நூலானது, “மொழிகள் ஊடாக சமூகங்களை இணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்முகம் குகதாசன் ஆகியோர் பங்கேற்று நூலினை பெற்றுக்கொண்டனர் 

கௌரவ விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார, திருகோணமலை பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு. டி. எம். யூ. எம். திசாநாயக்க, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர் (டாக்டர்) ஏ. எஃப். மொஹமத் அஷ்ரஃப், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் (டாக்டர்) கே. டி. சுந்தரேசன் மற்றும் ரூகுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத்துறை மூத்த விரிவுரையாளர் டாக்டர் தம்மிக ஜெயசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.  

இரு சமூகங்களுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மொழிப் பாலம் அமைக்கும் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த அகராதி வெளியீட்டு விழாவில் பெருமளவான பொதுமக்களும், இலக்கிய ஆர்வலர்களும், கலந்துகொண்டிருந்தனர்

Share the Post: