நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளன.
- தெதுறு ஓயா: 4 வான் கதவுகள் 3 அடி வீதம் திறப்பு (8,400 கன அடி நீர் வெளியேற்றம்).
- லுணுகம்வெஹேர: 6 வான் கதவுகளும் திறப்பு (2,915 கன அடி நீர் வெளியேற்றம்).
- ராஜாங்கனை: 6 வான் கதவுகள் திறப்பு (4,542 கன அடி நீர் வெளியேற்றம்).
இதன் காரணமாக தெதுறு ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளைப் பயன்படுத்தும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Views: 110




