கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இருமொழி மூல (Bilingual) மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கல்விக் கண்காட்சி அண்மையில் கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் (FSC) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இருமொழி மூலமாக கல்வி பயிலும் மாணவர்களின் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புத்தாக்கப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் இருமொழிப்பிரிவு இணைப்பாளர் திருமதி சு.திருஞானசம்பந்தர் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இவ்வுயரிய கல்விசார் நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மாணவர்களின் ஆக்கத்திறனைப் பார்வையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.








