கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இருமொழி மூல மாணவர்களின் பிரம்மாண்ட கல்விக் கண்காட்சி!
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இருமொழி மூல (Bilingual) மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கல்விக் கண்காட்சி அண்மையில் கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் (FSC) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இருமொழி மூலமாக கல்வி பயிலும் மாணவர்களின் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புத்தாக்கப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் இருமொழிப்பிரிவு இணைப்பாளர் திருமதி சு.திருஞானசம்பந்தர் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின்










