வி.சுகிர்தகுமார்
5ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் ஆங்கிலத்தில் புத்தகம் இரண்டினை எழுதி வெளியீடு செய்த வரலாற்று நிகழ்வு அக்கரைப்பற்றில் நேற்றிரவு (21) இடம்பெற்றது.
ரிசாந்தன் அபிசாதன் மற்றும் மொஹமட் கியாஸ் மின்ஹால் ஆகிய இரு மாணவர்களுமே இவ்வாறு ஆங்கில மொழி மூலமான புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர்.

இதில் ரிசாந்தன் அபிசாதன் மற்றும் மொஹமட் கியாஸ் மின்ஹால் இருவரும் இணைந்து சான்பாஸ் ஜேனி (ளூயnPயற’ள துழரசநெல) எனும் முதலாம் அத்தியாய புத்தகத்தினையும் ரிசாந்தன் அபிசாதன் சிறுவர்களுக்கான ஆறு சிறுகதைகள் அடங்கிய மோறல் ஸ்டோரிஸ் (ஆழசயட ளுவழசநைள) எனும் புத்தகத்தினையும் தனியாகவும் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இப்புத்தகத்தினை எழுதி வெளியிடுவதற்காக ஆசிரியர்கள் திருமதி தானியா நியாஸ் மற்றும் திருமதி பரீனா சாம்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து நெறிப்படுத்தியுள்ளனர்.
இதேநேரம் குறித்த இரு மாணவர்களும் அக்கரைப்பற்றில் உள்ள பெப்பல்ஸ் (Pநிpடநள ஊயஅpரள) தனியார் கல்வி நிலையத்தில் முதலாம் தரம் முதல் கற்று வருகின்றனர்.

குறித்த புத்தக வெளியீடானது அக்கரைப்பற்றில் உள்ள ரிசாந்தன் அபிசாதன் இல்லத்தில் நடைபெற்றதுடன் நிகழ்வில் முன்னாள் வங்கி முகாமையாளர் குழந்தைவடிவேல் ஆசிவழங்கி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து ஓய்வுநிலை அதிபர் வி.சந்திரசேகரம் வரவேற்புரை வழங்கியதுடன் நூல் தொடர்பாகவும் மாணவர்களின் திறன் தொடர்பாகவும் ஆசிரியர்களான திருமதி தானியா நியாஸ் மற்றும் திருமதி பரீனா சாம்ஸ் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
இச்சிறிய வயதில் ஆங்கிலத்தில் எழுதி நூலினை வெளியிடுதல் என்பது அசாத்தியமானது எனவும் அவர்களின் திறமைக்கு எடுத்துகாட்டெனவும் புகழாரம் சூட்டினர்.

இதேநேரம் அபிசாதனின் பெற்றோரை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் மின்ஹாலின் பெற்றோரையும் பாராட்டினர்.
தொடர்ந்து மாணவர்களால் புத்தகங்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் வருகைதந்தவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வானது அபிசாதனின் பிறந்தநாள் நிகழ்வினை முன்னிட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




