காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து சோதனைக் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (21.08.2026) மாலை 7:00 மணி முதல் நள்ளிரவு வரை இச்சோதனை நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி. ஏ.எம்.ஆர்.என். அழககோன் (IP) அவர்களின் வழிகாட்டலில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி ரிஷான் மதுசாந்த (IP) மற்றும் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி செனவிரட்ன (SI) ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு, பொலிஸ் பிரிவு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது,
- தலைக்கவசம் (Helmet) அணியாமல் பயணித்தவர்கள்,
- போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களைச் செலுத்தியவர்கள்,
- வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள்,
- போதைப்பொருள் பயன்படுத்தியவாறு வாகனங்களைச் செலுத்தியவர்கள்
உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பலருக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





