சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘ரண்விமன’ விசேட வீடமைப்பு திட்டத்தின் கீழ், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் நேற்று (12) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் MSM. றஸ்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. மஞ்சுள ரத்நாயக பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீடுகளைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் NF. அய்மா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் AL. ஜுனைதா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் AL. நௌபீர், தேசிய மக்கள் சக்தியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் ஏ.எல். அலி சப்ரி, பிரதேச சபை உறுப்பினர் ஏ. மர்சூக், சமுர்த்தி திட்ட முகாமையாளர் M. நப்ரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.கே. அஸ்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான IL. மக்பூல், ASM. பசீர், ஜனாப் ஜெமீல், கிராம நிலadhikari உத்தியோகத்தர்களான Mj. அதிக், திரு. உபாலி, ஜனாப் றினோஸ் (CEO) உட்படப் பல அரச அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.







